Photo
~ The Tamil Thanksgiving Day ~ Wishing Everyone a Happy ‘Pongal ‘o Pongal’ ~ January 14, 2013 ~  twitter.com/tamilamerican ~ facebook.com/pages/Tamil-American-Peace-Initiative/
~ Greeting on Pongal day saying Pongal ‘o Pongal signifies the abundance of milk foam spillover, from the clay pot and other vessels that are used to make the sweet rice – Pongal, as sign of prosperity and happiness.

~ The Tamil Thanksgiving Day ~ Wishing Everyone a Happy ‘Pongal ‘o Pongal’ ~ January 14, 2013 ~  twitter.com/tamilamerican ~ facebook.com/pages/Tamil-American-Peace-Initiative/

~ Greeting on Pongal day saying Pongal ‘o Pongal signifies the abundance of milk foam spillover, from the clay pot and other vessels that are used to make the sweet rice – Pongal, as sign of prosperity and happiness.

Text

2013 ~ தை பொங்கல் வாழ்த்துக்கள்

லகெங்கும் பரந்து வாழும் எனது தமிழ் உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

தை பொங்கல் விழாவை தமிழ் இந்து மக்கள் மாத்திரமல்ல, அண்மைக் காலங்களில தமிழ் கிறீஸ்தவர்களும் தமக்குரிய நன்றி வழிபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் நெருங்கிய காலங்களில், விசேடமாக தாயக தாகத்துடன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் இது தமிழ் மரபு விழாவாக கொண்டாடப் படுகிறது.

இது தாயக தாகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் புலத்தில் வாழும் எமது ஈழத் தமிழருக்கு மிகவும் கருத்தும் பொருத்தமும் உந்து சக்தியும் அளிக்கும் விழாவாக இம் மரபு நாளை வரவேற்கிறோம்.

இறைவன் எம்மை மனிதராக படைத்த பொழுது எமக்கென்று மொழி, நிறம், கலை, கலாச்சாரம், தாயகம,; திறமைகள், பழக்க வழக்கங்கள் என்று போதியளவு கொடைகளைக் இனாமாகக் கொடுத்திருக்கிறார். இவைகளை எமது மூதாதையர்கள் பெருமையுடன் காத்து வழர்த்தனர். ஓவ்வொரு தலை முறையும் அப் பணியை செய்து வருகின்றனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் தமக்குரிய நவீன வசதிகளுடன் இப் பணியை நன்றாக செய்கின்றனர்.

இவைகள் உண்மையாயிருந்தும் எமக்குள் பலர் எமது மரபுக் கொடைகளை மறந்து, மற்றைய இனங்கள், மொழிகள், கலை கலாச்சாரங்களிலும் பார்க்க ஏதோ நாம் குறைந்தவர்கள் என்று, சுய மரியாதை அற்றவர்களாக, அடிமைகளாக வாழ்வதை பார்ப்பது எமக்கு வருத்தத்தை தருகின்றது.

மகாத்மா காந்தி கூறுகிறார்:-

உலகத்தின் எல்லா மொழி, கலை, கலாச்சாரங்களையும் நான் பெருமையுடன் வரவேற்கிறேன், மதிக்கிறேன். ஆனல் என்னை எனது சொந்த கலாச்சாரத்திலிருந்து பிரிக்க விட மாட்டேன்.

எமது விடுதலை முழுமையானதாக உண்மையதனதாக இருக்க வேண்டுமாயின், முதலில் நாம் எம்மை மதிக்கவேண்டும், எமது அயலவனை மதிக்க வேண்டும்.

அன்பர்களே தமிழ் மரபு விழாக்கள் ஊடாக எமது தமிழ் அடையாளத்தையிட்டு பெருமை கொள்வோம். அம் மரபு எமது குடும்பங்களிலும் குழுமங்களிலும் வளரவும் வளர்க்கவும் ஆவன செய்வோமாக!

பணியாளன் எஸ். ஜே. இம்மானுவேல்
தென் ஆபிரிக்கா, 13.01.2013

Text

‘Thai Pongal’ Day

“Pongal” is an ancient festival of the Tamils with their origins in South India and Sri Lanka. There is no recorded date or event that began this Tamil festival, but some historians believe it to have been celebrated in somewhat similar format during 200 B.C. - 300 A.D, known as the “Sangam era”.

On this day “Sakkarai Pongal” (sweet rice) is made and offered to the Sun and farm animals are both celebrated and treated with dignity in festive atmosphere. In comparisons with the traditions of North America, “Pongal” is the “Tamil Thanksgiving Day”.

“Pongal” is a secular festival normally marked on a day between 13-15th of January; it is celebrated on the first day of the month of “Thai” according to the Tamil Almanac.  The timing corresponds with the transit of the Sun from the sign of Sagittarius to the sign of Capricorn.  As the festival falls on the beginning of the Tamil Month “Thai” that is equivalent to the month of “January” in the English calendar, the day of “Pongal” has gained added significance in the lives of “Global Tamils” all over the world.

Traditionally Tamils have celebrated the dawn of the month of “Thai” as the one that paves way for new beginnings and in that especially a one that opens new paths if for one has been amidst hindrances during the previous year. It is a widely followed tradition that the “Tamil Thanksgiving Day” ushers families, friends and businesses and enterprises in pureness, philanthropy and prosperity.

 “Pongal”, the sweet rice prepared on this day is traditionally cooked from freshly harvested and milled paddy. This simple delicacy is served in Indian restaurants around the globe and it is perhaps the only dish to have lent its name to a festival in eternal fame, according to Toronto based writer Kumar Punithavel. Literally “Pongal” translates as boiling over. It signifies the outpouring of celebration, thankfulness and charity.

In traditional Tamil habitats, the farmers’ markets around towns and villages bustle with activity during days preceding “Thai Pongal”. The bountiful harvests parade the markets, and the final day the market convenes prior to “Pongal” known as “Pongal Santhai” (“Pongal” market) especially lavishes with prosperous sentiments.

“Thai Pongal” harvest celebration and “thanksgiving” are marked by the spillover of the traditional sweet rice cookout and everything good in abundance to follow in the year it joyously indicates.

“Pongal”, for having thousands of years such tradition and history has been finding a place in the festivities of several global communities, particularly in cities and towns with large number of new comers of Tamil heritage now making their new homes.

The month entirely considered by Tamils as ideal for any new beginning has been proclaimed as “Tamil Heritage Month” in cities of the Province of Ontario, Canada for the past few years lime lighting historical Tamil traditions and arts while enabling the recognition of diverse cultures amongst the communities in a globalized world. 

Text

பொங்கலோ பொங்கல்!

மிழ்ப் புத்தாண்டு பிறக்கட்டும்
தமிழர் வாழ்வில் புத்துணர்வு பொங்கட்டும்

தரணிவாழ் தமிழர் உள்ளம் உணர்ச்சி பெற்றே
தரங்கெட்டே வாழாமல் தமிழ் உணர்வு பொங்கட்டும்!
தமிழர்க்கு முதல் எதிரி தன்மானம் இழந்த தமிழர் தான்
இனமானம் பொங்கட்டும்,இனவுணர்வு பெருகட்டும்!

புரியாத மந்திரத்தால் வந்து உதவாத கடவுள்களால்
திசை தெரியாமல் அலைந்து வரும் தமிழரெல்லாம்
பெரியாரைக் கடைப் பிடித்து ஆசிரியர் வழி கண்டு
எதிர் காலம் நமதென்றே இணைந்திட்டால் வழி பிறக்கும்!

‘விடுதலை’ ‘உண்மை’ ‘பெரியார் பிஞ்சு’ தமிழர்
இல்லங்களில், கணினிகளில் வலம் வரட்டும்
இல்லாத கடவுள்களும் பொல்லாத ஜாதிகளும்

ஒழியட்டும்! ஒளி பிறக்கும் தமிழர் நெஞ்சில்!
இந்த ஆண்டு நமது ஆண்டு ஈழத்தைப் பெற்றெடுப்போம்
இனி வரும் ஆண்டுகளில் தமிழரென ஒன்று பட்டு
‘புதியதோர் உலகம் செய்வோம்’ மகிழ்வுடனே

பொங்கிடுவோம் பொங்கல் பொங்கலோ பொங்கலென்று!

-சோம.இளங்கோவன்., பிச்சாண்டார்கோவில்

Audio

மைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
                                                    
இமை திறந்தே தலைவி கேட்டால் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம் -
நீராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்

                                                      
பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்கலாயினர் அன்பு திருந்தி -
பாவேந்தர் பாரதிதாசன் (
பாடல் வழங்குபவர்: நித்தியஸ்ரீ)

Audio

Thai porantha vazhi porakkum

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

Photo
Photo
The legendary Kuzhandai Kavignar Azha Valliappa, (1922-1989) a pioneer known for dedicated work of children’s literature in Tamil, wrote the following poem about Pongal in his collection of poetry for children, Malarum Ullam (Blossoming minds):The poem brings out the charm in preparing for and celebrating Pongal festivities, and roughly translates as follows:Walls newly paintedfloors neatly polishedDay break showerLamp within flickerGarner decorated crockDazzle around turmericCrock atop stoveMilk therein pourFoaming milk spilloversGreetings galore ‘Pongal ‘o Pongal’ Offer almighty riceCoconut sugarcane feastTogether we eatSinging dancing joyously

The legendary Kuzhandai Kavignar Azha Valliappa, (1922-1989) a pioneer known for dedicated work of children’s literature in Tamil, wrote the following poem about Pongal in his collection of poetry for children, Malarum Ullam (Blossoming minds):

The poem brings out the charm in preparing for and celebrating Pongal festivities, and roughly translates as follows:

Walls newly painted
floors neatly polished

Day break shower
Lamp within flicker

Garner decorated crock
Dazzle around turmeric

Crock atop stove
Milk therein pour

Foaming milk spillovers
Greetings galore ‘Pongal ‘o Pongal’

Offer almighty rice
Coconut sugarcane feast

Together we eat
Singing dancing joyously

Site Meter